Sunday, October 31, 2010

மன அழுத்தமா? உங்களுக்கு

பரபரப்பான இறுக்கமான சூழலில் சுழன்று கொண்டிருக்கிறது உலகம். எல்லா துறையிலும் எல்லா பணிகளிலும் அனைவரும் ஒருவிதமான மன இறுக்கத்துடனேயே சுழன்று கொண்டிருக்கிறார்கள்.


மனிதனுக்கு வரும் நோய்களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருவதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதுவே மன அழுத்தத்தை குறைப்பதற்கான தேவையை நமக்கு எடுத்துக் கூறுகிறது.
                                                            
மன அழுத்தத்தை விரட்ட, உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், மன அழுத்தம் இளவயதினர் உட்பட அனைத்து தரப்பினருக்கும் ஏற்படுகிறது. இதற்கு வாழ்க்கை முறை, வேலை உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுகிறது.


மன அழுத்தம் காரணமாக, இரத்த அழுத்தம், அஜீரண கோளாறுகள், முடி கொட்டுதல், தோல் நோய்கள் போன்றவை ஏற்படுகின்றன. மேலும், இதயம் தொடர்பான பிரச்னைகள், நீரிழிவு நோய் போன்றவற்றிற்கும் மன அழுத்தம் மூல காரணமாக இருக்கிறது.

இது குறித்து மனநல மருத்துவர்கள் கூறியதாவது: ஒருவருக்கு ஏற்படும் மன அழுத்தம் அவரது உடலை பாதிப்பதோடு அல்லாமல், மற்றவர்களின் மனதிலும், உறவு, நட்பு போன்றவற்றிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மன அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்கள் மது உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு ஆளாகின்றனர். இதனால், அவர்கள் மீதான சமூகத்தின் பார்வை வேறுவிதமாக மாறுகிறது. எனவே, மன அழுத்தத்தை விரட்டுவதற்கு, உங்களுக்கு பிடித்தமான செயல்களில் ஈடுபடுவதன் மூலம், கவனத்தை திசை திருப்பி, மன அழுத்தத்தை குறைக்க முடியும்.

கலை நிகழ்ச்சிகள், சினிமா, நடன வகுப்புகள், இசை நிகழ்ச்சிகள், சமையல் வகுப்புகள் உள்ளிட்டவற்றுக்கு போவது, பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித் தருவது, புத்தகம் படிப்பது, தோட்ட வேலைகளில் ஈடுபடுவது போன்ற நமக்கு பிடித்தமான செயல்களில் ஈடுபடும் போது, மனதில் அமைதியும், மன நிறைவும் ஏற்படுகிறது.



Friday, October 29, 2010

ஜனநாயகம்

அப்துல் கலாம் சென்னை வரும்போதெல்லாம் விரும்பிச் சென்று சாப்பிடும் உணவகம் அன்னலட்சுமி. அங்கு ஒரு சாப்பாட்டின் விலை 750 ருபா. எளிமையின் சிகரமான கலாம், அன்னலட்சுமியில் உணவருந்திக் கொண்டிருக்க, 2020-இல் இந்தியாவை வல்லரசாக்க கனவு காணுங்கள் என அவர் கோருகின்ற இந்தியக் குழந்தைகளோ 2 ருபா கொடுத்து ரேசன் அரிசி வாங்க இயலாத வறுமையால் பட்டினியில் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.


“பருவ மழை பொத்து வறட்சி ஏற்பட்டாலும் நமது மக்கள் எவரும் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட அனுமதிக்க மாட்டோம்” எனக் கடந்த மாதம் மன்மோகன் சிங் முழங்கிக் கொண்டிருந்தபோதே, இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பட்டினிச் சாவுச் செய்திகள் வெளிவரத் தொடங்கியிருந்தன.

மத்தியப் பிரதேச மாநிலத்தில மட்டும் ஜூலை 2008 முதல் ஜனவரி 2009 வரை, சத்தான உணவின்றி உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 676. அங்கு கர்ப்பிணிகளுக்குப் போதிய ஊட்டச்சத்தான உணவு இல்லாததால், ஒவ்வொரு நாலு நிமிடத்திற்கும் ஒரு குழந்தை இறந்தே பிறக்கிறது. தப்பிப் பிழைக்கும் குழந்தைகளில் 14 சதவீதம், தங்களது ஆறு வயதிற்குள் மடிந்து போகின்றன. ஊட்டச் சத்தின்மையால் வாடும் குழந்தைகளின் சதவீதம் 45-இல் இருந்து 60-ஆக இப்போது உயர்ந்துள்ளது.
 
 
மத்தியப் பிரதேசத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பட்டினிச் சாவுகள் நடந்தவண்ணம் உள்ளன. நாம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுவிட்டோம், நமது கிடங்குகளில் உள்ள தானிய மூட்டைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கினால் நிலவுக்கே கூட போய் வரலாம் எனப் பொருளாதார மேதைகள் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் போதே, திசைகள் எங்கும் பட்டினிக் கொடுமை நீக்கமற நிறைந்திருக்கிறது. நெல்லின் பிறப்பிடமான ஒரிசாதான் இந்தியாவிலேயே பட்டினிக் கொடுமையில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இந்தியாவிலேயே அதிகபட்ச இறப்பு விகிதம் உள்ள மாவட்டம் ஒரிசாவின் காலகந்தி ஆகும் (ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் 140 பேர் செத்துப் போகிறார்கள்).
 
இதுதான் வல்லரசுக் கனவுகளோடு நோஞ்சான் தலைமுறையை அடைகாக்கும் இந்தியாவின் நிலைமை. வயிற்றை நிரப்ப உணவின்றிப் பச்சிளங்குழந்தைகள் ஒவ்வொரு நொடியும் செத்துக் கொண்டிருக்கும்போது நாட்டை வல்லரசாக்குவதையும், சந்திரனுக்கு மனிதனை அனுப்புவதையும் பற்றி மேதாவிகள் அளந்து கொண்டிருக்கின்றனர். கும்பி கூழுக்கு அழுததாம்! கொண்டை பூவுக்கு அழுகிறதாம்!

Friday, October 22, 2010

இந்தியா வளர்ந்திருக்கிறது – இந்தியன் வளரவில்லை

அரசியல்வாதிகளுக்கு பிரச்சாரம் செய்ய ஹெலிகாப்டர் கிடைக்கவில்லையாம். பிரச்சாரத்திற்கு எண்ணற்ற டாட்டா சுமோ கார்கள் புக் செய்யப்படுகின்றன. தேர்தலில் ஓட்டு வாங்க பணம் கொட்டி இறைக்கப்படுகிறது. ஷேர் மார்க்கெட் பதினோராயிரம் புள்ளிகளைத் தாண்டி விட்டது. அரசியல்வாதிகளின் கருப்புப் பணம் ஒன்றரை லட்சம் கோடி சுவிஸ் வங்கிகளில் முடங்கிக் கிடக்கின்றனவாம். நடிகர்கள் கோடிகளில் சம்பளம் வாங்குகின்றார்களாம். உங்களுக்கு நன்மை செய்ய பிறப்பெடுத்திருக்கிறோம் என்று சொல்லியே ஓட்டு வாங்கும் அரசியல்வாதிகள், சாதாரண ரசிகனைக் குறி வைக்கும் திரைப்படங்கள் போன்றவற்றைப் பற்றி இப்படத்தினைப் பார்த்த பிறகு ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்.


                                               

இந்தியா வளர்ந்து விட்டதா என்ற கேள்விக்கு என்ன பதில் இருக்க இயலும்.

108 வயது வரையில் ஓட்டுப் போட்டுக் கொண்டிருக்கும் வாக்காளரின் நிலமையைப் பாருங்கள். ஓட்டு வாங்கி ஜெயித்தவர்களின் நிலைமையையும் பாருங்கள்.



               செய் நன்றி மறந்த உலகமடா இது தோழா !!!

Saturday, October 9, 2010

கற்பனை இதழ்

தனிமையின்


நீளம் நீண்டு ,நீண்டு

கற்பனைகள் தீரத் தொடக்கி விட்டது

உன் பார்வைகளை சற்று வீசிச்செல்

நிரப்பிக் கொள்கிறேன் .,

தீர மறுக்கும் கற்பனைகளை அல்ல !.

தீர்ந்து போகும் உன் நினைவுகளை
தொலைபேசி


இணைப்பை துண்டித்து

பல நிமிடம் கடந்த பின்பும்

இன்னும் ஓங்கி

ஒலித்துகொண்டே இருக்கிறது .



உன் இதழ்கள் உன் பெயரை

உச்சரித்த வார்த்தைகள் மட்டும்

நிசப்தத்திலும் பெரும் சத்தமாக

என் அலுவலக அறையெங்கும்

மொபைல் போன்களை

மொபைல் போன்கள் தங்களது செய்திகளை நினைத்த நேரத்தில் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு அரிய கண்டுப்பிடிப்பு என்பது மறைந்து இன்று தங்களது பணத்தின் அளவையும் வசதியையும், சுற்றி இருக்கும் மக்களுக்கு அறிவிக்கும் ஒரு காட்சிப் பொருளாக மாறிப்போய்விட்டது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும். நாம் சந்திக்கும் எவரிடமெனும் மொபைல் போன்கள் இல்லை என்றால் அவர்களை ஏளனமாக பார்க்கும் ஒரு கொடிய எண்ணம் இன்று பலரின் மனதில் குடியேறத் தொடங்கிவிட்டது. இந்த பதிவின் வாயிலாக யாரும் மொபைல் போன்களை பயன்படுத்தக் கூடாது என்று சொல்வது இல்லை என் நோக்கம். நமது தினசரி வாழ்வில் நாள் ஒன்றிற்கு நம்முடன் அதிகமாக உறவாடும் ஒரு சாதனம் மொபைல் போன் என்று ஆகிவிட்டது . அப்படிப்பட்ட இந்த அறிவியலின் அறிய கண்டுபிடிப்பால் நமக்கு மறைமுகமாக ஏற்படும் பாதிப்புகளை அறியாத பலருக்கு தெரியப்படுத்துவதே எனது நோக்கம்


ப்பொழுதுக்கூட சில தினங்களுக்கு முன்பு ஒரு ஆய்வின் அறிக்கை அறிய வந்தது. செல்போன்கள் இன்றைய அத்தியாவசியங்களில் தவிர்க்கவே முடியாத அளவுக்கு மாறிவிட்டது. ஆனால் இதே செல்பேசிகளின் தீயவிளைவுகள் பற்றி பல்வேறு நாட்டைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்களின் தீவிர ஆய்வுகளில் பல உண்மைகள் வெளியாகி உள்ளன. செல்போனால் மனிதனுக்கு வரும் ஆபத்துகள், உடல் நலக் கோளாறுகள் குறித்து நாளும் ஒரு செய்தி வெளியாகி புளியைக் கரைத்து வருகிறது.
துபோலவே செல்பேசி "டவர்களும்" மிகவும் ஆபத்தானவை தான். அவற்றிலிருந்து வரும் பாதுகாப்பற்ற நுண்ணலை கதிர்வீச்சுகளில் சுமார் 60%, தலைப்பகுதிகளில் கிரகிக்கப்பட்டு, கொஞ்சம் மூளையினுள் ஊடுருவி செல்வதாக கண்டறிந்துள்ளனர்.

உடல் எடையைக் குறைக்க 12 வழிகள்

இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் கொண்டு அனைவருக்குமே பெரும் பிரச்னையா இருப்பது உடல் பருமன் தான். அதிலும், அடிவயிற்றில் சதைப்பிடிப்பு அதிகமாக இருந்தால் உடல் அழகே கெட்டுவிடும். தொப்பையால் தங்கள் அழகு கெட்டுவிட்டதே என்று பல பெண்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்

தினமும் 2 டம்ளர் பால் குடிப்பதன் மூலம் உடல் எடை குறையும் என புதிய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. பால் குடிப்பதால் உடல் எடை குறையுமா என்பது குறித்து நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டது. இதற்காக, உடல் பருமன் உள்ள 40 முதல் 65 வயதுக்குட்பட்ட 300 ஆண், பெண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை கொழுப்பு மற்றும் மாவுச் சத்து குறைவான உணவு வழங்கப்பட் டது. இத்துடன் ஒரு பிரிவினருக்கு தினமும் 2 டம்ளர் பால் வீதம் வழங்கப்பட்டது. இதைவிட சிலருக்கு குறைவாகவும் இன்னும் சிலருக்கு கூடுதலாகவும் வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு பால் வழங்கப்படவில்லை. 2 ஆண்டுகளுக்குப் பிறகு பரிசோதனை செய்ததில் தினமும் 2 டம்ளர் பால் குடித்தவர்களின் உடல் எடை 6 கிலோ வரை குறைந்து இருந்தது. பால் குடிக்காதவர்களின் எடையில் மாற்றம் ஏற்படவில்லை. சற்று கூடுதலாக பால் அல்லது பால் பொருட்கள் சாப்பிட்டவர்களின் எடை 5 கிலோ வரை குறைந்தது. குறைவாக வழங்கப்பட்டவர்களின் எடை வெறும் 3.5 கிலோ மட்டுமே குறைந்தது. பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை அதிக அளவில் உள்ளன. இவை உடல் எடையைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
 
 
எடையைக்குறைக்க 100 ஆண்டுகள் வாழ 200 ஆலோசனைகள் என்ற நூலில் இருக்கும் தகவல்கள் இதோ !







01. உப்பு உடலை உப்ப வைக்கும், உப்பை அளவோடு சாப்பிடுங்கள்.


02. நொறுக்குத் தீனி சாப்பிடுவதை அறவே விட்டுவிடுங்கள்.


03. தினமும் குறைந்தது நாலு கி.மீ. நடவுங்கள்.


04. கொழுப்பு சத்துள்ள உணவை தவிருங்கள்.


05. இனிப்பு, மாவு, மசாலா, எண்ணெய்ப் பொருட்களை சாப்பிட வேண்டாம்.


06. பசிக்காத போது சாப்பிட வேண்டாம்.


07. உணவை அளவோடு சாப்பிடுங்கள். சுவை கருதி உணவை ஒரு பிடி பிடித்துவிடாதீர்கள்.


08. குளிர்ந்த நீர், மோர் என்பவற்றைக் குடியுங்கள்.


09. எடை கூடிவிட்டதே என்று கவலைப்படாதீர்கள்.


10. உங்கள் எடையைவிட 10 சதவீதம் அதிகமாக இருந்தால் ஆயுளில் 13 சத வீதம் குறையும்.


11. பட்டினி கிடப்பதால் உடல் எடை குறையாது, உடலுக்கு கெடுதலே வரும்.


12. ஒழுங்கு முறையாக தேகப்பயிற்சி செய்யுங்கள்.