மொபைல் போன்கள் தங்களது செய்திகளை நினைத்த நேரத்தில் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு அரிய கண்டுப்பிடிப்பு என்பது மறைந்து இன்று தங்களது பணத்தின் அளவையும் வசதியையும், சுற்றி இருக்கும் மக்களுக்கு அறிவிக்கும் ஒரு காட்சிப் பொருளாக மாறிப்போய்விட்டது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும். நாம் சந்திக்கும் எவரிடமெனும் மொபைல் போன்கள் இல்லை என்றால் அவர்களை ஏளனமாக பார்க்கும் ஒரு கொடிய எண்ணம் இன்று பலரின் மனதில் குடியேறத் தொடங்கிவிட்டது. இந்த பதிவின் வாயிலாக யாரும் மொபைல் போன்களை பயன்படுத்தக் கூடாது என்று சொல்வது இல்லை என் நோக்கம். நமது தினசரி வாழ்வில் நாள் ஒன்றிற்கு நம்முடன் அதிகமாக உறவாடும் ஒரு சாதனம் மொபைல் போன் என்று ஆகிவிட்டது . அப்படிப்பட்ட இந்த அறிவியலின் அறிய கண்டுபிடிப்பால் நமக்கு மறைமுகமாக ஏற்படும் பாதிப்புகளை அறியாத பலருக்கு தெரியப்படுத்துவதே எனது நோக்கம்


இப்பொழுதுக்கூட சில தினங்களுக்கு முன்பு ஒரு ஆய்வின் அறிக்கை அறிய வந்தது. செல்போன்கள் இன்றைய அத்தியாவசியங்களில் தவிர்க்கவே முடியாத அளவுக்கு மாறிவிட்டது. ஆனால் இதே செல்பேசிகளின் தீயவிளைவுகள் பற்றி பல்வேறு நாட்டைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்களின் தீவிர ஆய்வுகளில் பல உண்மைகள் வெளியாகி உள்ளன. செல்போனால் மனிதனுக்கு வரும் ஆபத்துகள், உடல் நலக் கோளாறுகள் குறித்து நாளும் ஒரு செய்தி வெளியாகி புளியைக் கரைத்து வருகிறது.
இதுபோலவே செல்பேசி "டவர்களும்" மிகவும் ஆபத்தானவை தான். அவற்றிலிருந்து வரும் பாதுகாப்பற்ற நுண்ணலை கதிர்வீச்சுகளில் சுமார் 60%, தலைப்பகுதிகளில் கிரகிக்கப்பட்டு, கொஞ்சம் மூளையினுள் ஊடுருவி செல்வதாக கண்டறிந்துள்ளனர்.
No comments:
Post a Comment