தினமும் 2 டம்ளர் பால் குடிப்பதன் மூலம் உடல் எடை குறையும் என புதிய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. பால் குடிப்பதால் உடல் எடை குறையுமா என்பது குறித்து நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டது. இதற்காக, உடல் பருமன் உள்ள 40 முதல் 65 வயதுக்குட்பட்ட 300 ஆண், பெண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை கொழுப்பு மற்றும் மாவுச் சத்து குறைவான உணவு வழங்கப்பட் டது. இத்துடன் ஒரு பிரிவினருக்கு தினமும் 2 டம்ளர் பால் வீதம் வழங்கப்பட்டது. இதைவிட சிலருக்கு குறைவாகவும் இன்னும் சிலருக்கு கூடுதலாகவும் வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு பால் வழங்கப்படவில்லை. 2 ஆண்டுகளுக்குப் பிறகு பரிசோதனை செய்ததில் தினமும் 2 டம்ளர் பால் குடித்தவர்களின் உடல் எடை 6 கிலோ வரை குறைந்து இருந்தது. பால் குடிக்காதவர்களின் எடையில் மாற்றம் ஏற்படவில்லை. சற்று கூடுதலாக பால் அல்லது பால் பொருட்கள் சாப்பிட்டவர்களின் எடை 5 கிலோ வரை குறைந்தது. குறைவாக வழங்கப்பட்டவர்களின் எடை வெறும் 3.5 கிலோ மட்டுமே குறைந்தது. பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை அதிக அளவில் உள்ளன. இவை உடல் எடையைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
எடையைக்குறைக்க 100 ஆண்டுகள் வாழ 200 ஆலோசனைகள் என்ற நூலில் இருக்கும் தகவல்கள் இதோ !
01. உப்பு உடலை உப்ப வைக்கும், உப்பை அளவோடு சாப்பிடுங்கள்.
02. நொறுக்குத் தீனி சாப்பிடுவதை அறவே விட்டுவிடுங்கள்.
03. தினமும் குறைந்தது நாலு கி.மீ. நடவுங்கள்.
04. கொழுப்பு சத்துள்ள உணவை தவிருங்கள்.
05. இனிப்பு, மாவு, மசாலா, எண்ணெய்ப் பொருட்களை சாப்பிட வேண்டாம்.
06. பசிக்காத போது சாப்பிட வேண்டாம்.
07. உணவை அளவோடு சாப்பிடுங்கள். சுவை கருதி உணவை ஒரு பிடி பிடித்துவிடாதீர்கள்.
08. குளிர்ந்த நீர், மோர் என்பவற்றைக் குடியுங்கள்.
09. எடை கூடிவிட்டதே என்று கவலைப்படாதீர்கள்.
10. உங்கள் எடையைவிட 10 சதவீதம் அதிகமாக இருந்தால் ஆயுளில் 13 சத வீதம் குறையும்.
11. பட்டினி கிடப்பதால் உடல் எடை குறையாது, உடலுக்கு கெடுதலே வரும்.
12. ஒழுங்கு முறையாக தேகப்பயிற்சி செய்யுங்கள்.



No comments:
Post a Comment